
கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பெரும்பாலான மக்கள் கரோனா தடுப்பு செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கரோனாதடுப்பூசிசெலுத்தி கொள்வதில் 38.1 சதவீதம் பேருக்கு தயக்கம் இருப்பதாக மத்திய மருத்துவத்துறை அறிவித்துள்ளது. 19.7 சதவீதம் ஆண்களுக்கும், 18.4 சதவீத பெண்களுக்கும் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் தயக்கம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தடுப்பூசி செலுத்தி கொண்ட உடனேயே வாட்ஸப்பில் சான்றிதழ் பெறும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. 90131 51515 என்ற வாட்ஸ்அப் எண்ணில்'கோவிட்செர்டிஃபிகேட்' என அனுப்பப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் ஓடிபியினை பதிவு செய்தவுடன் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)