
தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 17,858 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் ஒரே நாளில் 5,445 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,12,556 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 15,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 10,21,575 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அடுத்துவரும்நாட்களில் மேலும் கரோனாபாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''கரோனாதொற்று ஏற்பட்டுள்ள 13 சதவிகிதம் பேருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் போர்க்கால அடிப்படையில் கரோனாசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என தெரிவித்துள்ளார்.
Follow Us