ADVERTISEMENT

நெல்லை – தென்காசி... தமிழக எல்லையில் கரோனா தடுப்பு நடவடிக்கை

04:52 PM Mar 17, 2020 | kalaimohan

கொள்ளை நோய் வைரஸ் கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பீதியிலிருக்க பல நாடுகள் தங்கள் நாட்டின் உலக நாடுகளுக்கான விமான சர்வீஸ்களை ரத்து செய்ததோடு, வருகையையும் தடை செய்து விட்டன. கூடிய வகையில் பொதுமக்களின் கூட்டம் திரளும் பகுதிகளுக்குத் தடா விதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT


வெளி நாட்டினர் இருவர் சந்தித்துக் கொண்டால் நட்பு ரீதியாக தங்களுக்குள் கைகுலுக்கிக் கொள்கிற மேலை நாட்டு கலாச்சாரத்தையே பின் பற்றிக் கொண்டிருக்கும் வெளிநாடு வாசிகள் கூட, இன்றைக்கு தமிழரின் பண்பாடு கலாச்சாரமான நட்பு மற்றும் நெருக்கம் காரணமாக சந்திக்கிற போது கையெடுத்து மன மகிழ்ச்சியோடு வணக்கம் தெரிவிக்கிற வகையில் கைகூப்பி கும்பிடும் பாராம்பரியமே சிறந்தது. ஆரோக்கியமானது, என்று தமிழர்களின் நாகரீகத்தை நொடியில் உலக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது கரோனா.

ADVERTISEMENT


இப்போது மேலை நாட்டினர் சந்தித்துக் கொண்டால் பகட்டிற்கு கரோனா அச்சம் காரணமாக கைகுலுக்குவதில்லை. பதிலுக்குப் பாசத்தோடு வணக்கம் வைக்கிறார்கள். கொரோனா தாக்கம் காரணமாக அதைத் தடுக்கிற வகையில், பொது மக்கள் கூடும் பகுதிகளுக்கு நெல்லை மாவட்டத்தில் கடுமையான கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மழலையர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு மார் 31 வரை விடுப்பு அறிவிக்கப்பட்டதோடு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டார்களையும் மார் 31ம் வரை மூடும்படி உத்தரவிட்ட ஆட்சியர் ஷில்பா, அவைகள் செயல்படாதவாறு கண்காணிக்கும்படி சரக தாசில்தார்களுக்கு உத்தரவிட்டுள்ளார். செயல்பட்டால். கடுமையான நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.


தென்காசிமாவட்டத்தின் புளியரைப் பகுதியிலிருக்கிறது தமிழக – கேரள எல்லை. குறிப்பாக வெளிநாடுகளுடன் இந்தியாவிலேயே அதிக தொடர்பிலிருப்பது கேரளா. இது தென்காசி மாவட்டத்தின் அண்டைப் பகுதியிலிருப்பதாலும் மேலும் அங்கு கரோனா தொற்று பலருக்குக் கண்டறியப்பட்டதாலும், அதன் தாக்கம் தமிழக எல்லைப் புறத்தைத் தாக்காமலிருக்க, ஒட்டியுள்ள செங்கோட்டைத் தாலுகாவிலுள்ள திரையரங்குகளை மார் 31ம் வரை மூடுவதற்கு உத்தரவாகியுள்ளது. மேலும் தடுப்பு பொருளான கிருமி நாசினியும் பாதுகாப்பு கருதி தெளிக்கப்படுகிறது. தவிர இந்த திரையரங்கு மூடல் மாவட்டத்தின் வேறு தாலுகாக்களுக்கு விரிவுபடுத்தவில்லை.


சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சாக்குளத்தில் கடந்த 1992ன் போது காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அந்த ஆண்டின் மார் 14 அன்று 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்க இருப்பதாலும், இன்று 16ம் தேதி விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி சார்பில் சங்கரன்கோவிலில் உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆதரவாளர்கள் குறிஞ்சாகுளம் செல்லும் பட்சத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் சங்கரன்கோவில் பகுதியில் வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிக்குமார் பிறப்பித்துள்ளார்.

பரபரவென்றிருக்கிறது மாவட்டங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT