
தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 205 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 300க்கும் குறைவான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 25,90,632 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,911 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,35,715 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,457 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,54,631 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 3,99,58,164 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது சிகிச்சையில் தமிழகம் முழுவதும் 20,370 பேர் உள்ளனர்.