Skip to main content

பாடம் நடத்தும் போலீஸ்! படம் பிடிக்கும் பப்ளிக்! -விருதுநகரில் விளையாட்டாக மாறிய கரோனா!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

‘தண்டனை கடுமையா இருக்கக்கூடாது. ஆனா.. வித்தியாசமா இருக்கணும்.’ -ஊரடங்கை மீறி சாலைக்கு வருபவர்களுக்கு ‘பாடம்’ நடத்தியே தீரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டிவரும் காவல்துறையினரின் மனநிலை இது!

 

 

 Corona become sport in Virudhunagar



விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் மனதில் அப்படி எழுந்த ஒரு சிந்தனைதான் – சாலையில் வரையப்பட்ட பெரிய அளவிலான கரோனா ஓவியம். ’ஒரு வேலையும் இல்லியே.. சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோம்!’ என்று கிளம்பி,  மதுரை – சாத்தூர் பைபாஸ் ரோட்டுக்கு பப்ளிக் வந்துவிட்டால், கரோனா ஓவியத்தில் வால் மாதிரி நீண்டுள்ள வட்டத்தில், உட்கார வைத்துவிடுகின்றனர். “இப்ப எதுல உட்கார்ந்திருக்கீங்க? கரோனாவுலதான..  வெளிய வந்தா இந்த மாதிரிதான், கரோனா உங்கள பிடிச்சிக்கிரும்!’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர். 
 

nakkheeran app



கரோனா ஓவியத்தின் பிடியிலிருந்து தப்பிவந்த ராஜசேகர், தனது அனுபவத்தைச் சொன்னார். சின்ன வயசுல ‘குலை குலையா முந்திரிக்கா.. நரியே நரியே சுற்றி வா.. கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்? கூட்டத்தில் இருப்பவன் கண்டுபிடி’ன்னு பாடி விளையாடிய பழைய நெனப்பு வந்திருச்சு.” என்று கூறியவரை ‘க்ளிக்’ செய்ய முயற்சித்தபோது, “மொத்தமா எல்லாரும் உட்கார்ந்தத போட்டோ பிடிச்சீங்கள்ல.  அதை போட்டுக்கங்க..  என்னோட தனி போட்டோ வேணாம். வீட்ல பசங்க பார்த்து சிரிக்கப் போறாங்க..” என்று நெளிந்தவர், “போலீஸ் பண்ணுற தப்பையும் கொஞ்சம் எழுதுங்க..” என்று தான் பார்த்ததை விவரித்துவிட்டுச் சென்றார். 

 

 Corona become sport in Virudhunagar



ராஜசேகர் குறிப்பிட்டுச் சொன்ன காவல்துறை அத்துமீறல் என்னவென்று பார்ப்போம்!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘சரியான காரணம் எதுவும் இல்லாமல், அரசுத்துறையின் ஒப்புதல் இல்லாமல்,  2 சக்கர வாகனங்கள் அல்லது 4 சக்கர வாகனங்களில், மதியம் 1 மணிக்கு மேல் பயணம் மேற்கொள்பவர்களைக் கைது செய்து, மேல் உத்தரவு இல்லாமலே வாகனங்களைப் பறிமுதல் செய்யலாம்’ என்று 144 தடையுத்தரவை மீறுபவர்கள் மீதான நடவடிக்கை குறித்து  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  

 

 corona virus impact -chennai highcourt order



உத்தரவில் மதியம் 1 மணிக்குமேல் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், பல ஊர்களிலும் அதற்கு முன்பாகவே, காவல்துறையினரின் ‘நடவடிக்கை’ ஆரம்பித்துவிடுகிறது. பகல் 11 மணிக்கு டூ வீலரில் சென்ற கணவன், மனைவி மீதெல்லாம் வழக்கு பதிவு செய்வது சர்வ சாதாரணமாக நடக்கிறது. ‘எதுக்கு டபுள்ஸ் போறீங்க?’ என்று  விருதுநகரில் காவல்துறையினர் கடுமை காட்டி வருவது, பொதுமக்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்கிறது. அதற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதத்தில், டூ வீலர்களில் காவலர்கள் இருவராகச் செல்வதையெல்லாம் படம் பிடித்து, ‘உங்களுக்கு மட்டும் தனிச்சட்டமா?’ என்று கேள்வி கேட்டு, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
 
மனித உயிர்களோடு கரோனா கொடூர ஆட்டம் போடுகிறதென்றால், மக்களைக் காப்பாற்றுவதே நோக்கமென்றாலும், சட்டத்தின் பெயரால், ஒவ்வொரு நாளும் தினுசு தினுசாக காவல்துறையினர்  விளையாடி வருகின்றனர். 

காவல்துறையினர் நடந்துகொள்ளும் முறை பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், காவல்துறையினருக்கு எதிராக புகார் அளிப்பதற்கு வசதி  ஏற்படுத்தக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர் ஆப்ரீன் என்பவர்,  தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அதற்கு, தமிழக டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.