Advertisment

தமிழகம் முழுவதும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகளுடன் திருநங்கைகளும் இணைந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் (01.08.2020) மாநகராட்சி மற்றும் உறவுகள் சோஷியல் டிரஸ்ட் சார்பில் சென்னை சேத்துப்பட்டு, ஸ்கூல் சாலையில் கரோனாபாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் கரகாட்டம் நடத்தப்பட்டது.