Advertisment

corona awareness Toy

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் மக்களிடம் கரோனா குறிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.

Advertisment

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டையை சேர்ந்த அந்தோணி செல்வம் என்பவர், மிகப்பெரிய கரோனா வைரஸ் உருவபொம்மையை உருவாக்கி, அதன் கழுத்தில் கரோனாவால் ஏற்படும் தீமைகளை பற்றி எழுதி தொங்கவிட்டு, அதை வீதி வீதியாக கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

திரைப்படத்துறையில் கலை இயக்குனராக பணிபுரிந்து வரும் இவரின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.