தமிழகத்தில் கடந்த மே மாதம் கரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்ததையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நோயின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கரோனா மூன்றாம் அலை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என பல ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா மூன்றாவது அலை குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரும்பாக்கம் அரசு அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையில் சென்னை மாநகராட்சி மற்றும் சித்தா மருத்துவமனை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் கரோனா கட்டுப்பாடுகள் குறித்து உறுதிமொழியை ஏற்று கபசுரக் குடிநீர், சூரணம் மற்றும் அமுக்கரா சூரணம் மாத்திரைகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/med-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/med-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/med-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/med-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/med-5.jpg)