Advertisment

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருப்பதால் 10.05.2021 முதல் 24.05.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையக் கூடாது என்ற நோக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

மக்களின் அசாதாரண போக்கைத் தடுக்கும் நோக்கத்தில் ஆங்காங்கே கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவரில் கரோனா தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சுவரில் படங்கள் வரையப்பட்டுள்ளன.