Advertisment

“கரோனா, சைனஸ், டெங்கு... அனைத்திற்கும் மூல காரணம் இதுதான்...” காவல்துறையினருக்கு முனைவர் ராஜேந்திரன் கூறிய தகவல்!

Corona Awareness Discussion in Madurai

Advertisment

ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட கரோனா விழிப்புணர்வு கலந்துரையாடல், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனோதத்துவ நிபுணர். ராஜேந்திரன் அதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவர் பகிர்ந்த தகவல்கள்...

கடந்த ஞாயிறு அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், அசிஸ்டன்ட் கமிஷனர் எனப் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.மொத்தம் 70 பேர் வரை பங்கெடுத்தனர். கரோனா விழிப்புணர்வு, நோயிலிருந்து விடுபடுவது ஆகிய தலைப்புகளின்கீழ் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, அனைத்து நோய்த் தாக்குதல்களில் இருந்துதற்காத்துக் கொள்ளுதல் பற்றியும், நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டால் அதிலிருந்து விடுபடுதல் குறித்தும் அறிவுரை கூறினார்.

Corona Awareness Discussion in Madurai

Advertisment

கரோனா, சைனஸ், டெங்கு என அனைத்திற்கும் சளி தான் மூலக்காரணம். சளி ஏன் அதிகம் பிடிக்கிறது என்றால் யாரும் சரியாக மலம் கழிப்பதில்லை. வேலைக்குச் செல்லும் அவசரகதியில் அனைவரும் இன்று ஓடிக்கொண்டு இருக்கிறோம். குளியல் முறையும் மாறிவிட்டது. காலை உணவையும் பெரும்பாலானவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிட்டது.

மருத்துவம் தவிர்த்து, சில வாழ்க்கை பாடங்களும் கற்றுக் கொடுத்தேன். பிரார்த்தனை செய்யுங்கள், மற்றவர்களிடம் வாழ்த்துப் பெறுங்கள் எனக் கூறினேன். அதேபோல நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பதற்கான வழிகளையும் கூறினார்.இந்தபயிற்சியில் கலந்து கொண்ட மூத்த அதிகாரிகள், கீழ்நிலை அதிகாரிகளுக்கு இதுகுறித்து வழிகாட்ட இருக்கிறார்கள்.

Corona Awareness Discussion in Madurai

நோய் வருவது இயல்பானது. அதுகுறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. நோய் வருவதற்கான மூலக் காரணம் என்ன என்பதை அறிந்து, அதன்படி நடந்துகொள்ள வேண்டும். மலச்சிக்கல் தான் அனைத்திற்குமான சிக்கல் என்பார்கள். அடிவயிற்றில் மலம் தேங்கும் போது, அது நஞ்சாக மாறி நோயை ஏற்படுத்துகின்றது. அதனால்தான், தினமும் சரியாக மலம் கழிக்க வேண்டும் என்று முன்னரே கூறினார்.

Ad

அதேபோல உறவுகளிடத்தில் அன்பு நிறைந்திருக்க வேண்டும். குறிப்பாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான அன்பு சரியாக இருக்க வேண்டும். பாலியல் தேவை நிறைவேறாத போது மனஅழுத்தம், கோபம் போன்றவை ஏற்படுகின்றன. எனவே பாலியல் ஆற்றாமையும் பல நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன.

Doctor police corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe