
நரசிம்குமார் கால்கே... ஜார்க்கண்ட் மாநிலத்தவரான இவர், அருப்புக்கோட்டை, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் செலவின மேலிடப்பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார்.
உடல் சோர்வு காரணமாக, கடந்த சில நாட்களாக அவதிக்கு ஆளாகிவந்த நரசிம்குமார் கால்கேவுக்கு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நரசிம்குமார் கால்கேவின் உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும், அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம், கரோனா தொற்று பாதித்த அதிகாரி நரசிம்குமார் கால்கே, மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
Follow Us