
தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 15,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 4,640 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,08,855 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 14,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 9,90,919 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 77 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை என்பது 13,692 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 12,370 கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 550 படுக்கைகளும், ஸ்டான்லி மருத்துவமனையில் 500 படுக்கைகளும் தயாராகின்றன. சென்னையில் 11 இதர மருத்துவமனைகளில் கூடுதலாக 1,420 படுக்கைகள் தயாராகி வருவதாக அரசு சார்பில்அறிவிக்கப்பட்டுள்ளது.