Corona again ... Tamil Nadu Chief Minister led consultation!

Advertisment

தமிழகத்தில் கரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள்விதிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

வரும் மார்ச் 31 ஆம் தேதியோடு தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்குபெற்றுள்ளனர். சில வாரங்களாக கரோனா பாதிப்பு என்பது கணிசமாகக் குறைந்து வந்த நிலையில், சில நாட்களாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.