Corona to actor Vikram

நடிகர் விக்ரமிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த கரோனா தொற்று தற்போது குறைந்துவருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை சீராக இருந்துகொண்டேவருகிறது.கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையிலேயே இருந்துவருகிறதே தவிர, தொற்றை முழுவதுமாக குறைக்க இயலவில்லை. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவார சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார்.

Advertisment

இந்நிலையில், நடிகர் விக்ரமிற்கு தற்போது கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி உள்ளதால் அவர்தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment