தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில்874 பேருக்குகரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் 618 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாஉறுதி செய்யப்பட்டவர்கள்எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் 12,737 ஆண்கள், 7,504 பெண்கள், 5 திருநங்கைகள் ஆகியோருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டவர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கரோனாபாதிப்பிலிருந்து 765 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,313 அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 9 பேர் உயிர் இழந்ததால்,இதுவரை தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 154 அதிகரித்துள்ளது.