தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மேலும் 96 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 27 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7,267பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றுகரோனா உறுதிசெய்யப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bheela rajesh9_2.jpg)
டெல்லி சென்று வந்த1,480 பேரில் 763 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி சென்று வந்தவர்கள் உடன் தொடர்பில் இருந்த, 188 பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் கண்டிப்பாக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்களையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டும்என்றார்.
Follow Us