தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களிலும் கரோனாபாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மதுரையில் ஒரே நாளில்80 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மதுரையில் 58 பேர் கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று ஒரே நாளில் திருவண்ணாமலையில் 130 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.