Advertisment

பிறந்த 7 நாள் குழந்தைக்கு கரோனா!

Advertisment

CORONA FOR A 7 DAYS BABY COVID TEST FOR POSITIVE

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கரோனா பாதிப்பு நாள்தோறும் குறைந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

Advertisment

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் ஜூன் 7- ஆம் தேதி அன்று காலையுடன் முடியவிருந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜுன் 14- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கரோனா உறுதியானது. கரோனா தொற்றுக்கு ஆளான தாய்க்கு பிறந்த 7 நாள் குழந்தைக்கு தொற்று உறுதியானதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.

ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 27 நாள் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் 7 நாள் குழந்தைக்கும் கரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus Thoothukudi district
இதையும் படியுங்கள்
Subscribe