Advertisment

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் உட்பட 54 பேருக்கு கரோனா!

Corona for 54 people, including counting officers and agents in pudukottai

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வாக்குப் பதிவானது நடந்து முடிந்தது. அதன்பின் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி நாளை வாக்குகள் எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தயார் நிலையில் உள்ளது.

Advertisment

''உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கபடமாட்டார்கள். கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அனுமதி கிடையாது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 16,387 பேர் ஈடுபடவுள்ளனர்''என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுக்கோட்டையில் நாளை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படஇருக்கிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபட இருந்த வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், அதிகாரிகள், முகவர்கள்என மொத்தம் 54 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாதொற்று உறுதி செய்யப்பட்ட 54 அதிகாரிகள், முகவர்களுக்கு பதிலாக மாற்று நபர்கள் வாக்கு எண்ணும் பணிக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சிவகாசி தொகுதியில் முகவர்கள் உப்பட 21 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus Pudukottai VOTE COUNTING
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe