ADVERTISEMENT

மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் 54 பேருக்கு கரோனா  

03:51 PM Mar 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மகாராஷ்ட்ராவில் 26 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று (26.03.2021) சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டதில், அங்கு பயிற்சி எடுப்பவர்கள், பயிற்சி கொடுப்பவர்கள் என மொத்தம் 18 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மேலும் 300 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்காக காத்திருந்தனர். தற்போது மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சையிலும் 16 பள்ளிகளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT