Advertisment

கரோனா நிவாரண நிதிக்காக, உண்டியல் சேமிப்பு தொகையை கொடுத்த பள்ளி மாணவன்!!! 

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில்மூன்றாம் வகுப்பு படித்து வருகிற மாணவன், கோவை கணபதியில் வசித்து வருகிறார்.கடுமையான கரோனா பாதிப்புக்காக தன் நான்கு வருட உண்டியல் சேமிப்பு தொகை 2,351 ரூபாயை கரோனாநிதியாக கலெக்டர் ராசாமணியிடம் அளித்தார்.

Advertisment

k

அது குறித்து தர்ஷனிடம் நாம் பேசியபோது, ‘’கடந்த நான்கு வருஷமாஎனது அம்மா, அப்பா வழங்கிய நாணயங்களை உண்டியல் மூலமாக புதிய சைக்கிள் வாங்குவதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருந்தேன்.கரோனா பாதிப்பை அறிந்த நான்,முதலமைச்சர் நிவாரண நிதிக்காக என்னுடைய சிறு உண்டியல் சேமிப்பு பணத்தை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர்வசம் வழங்கினேன். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கரோனா பாதிப்புக்காக நமக்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைபணியாளர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

nakkheeran app

Advertisment

கரோனா பாதிப்பிலும்நமக்காக பாடுபடும் அவர்களுக்கு நாம் அனைவரும் அவரவர் வீட்டிலேயே இருந்து, அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வதின்மூலமும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமும்நாம் நன்றி செலுத்த வேண்டும்.இதன் மூலம் நம்மால் கரோனாவை ஒழிக்க முடியும்’’என்றார்.

மேலும் தர்ஷன், “கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, பொது மக்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி 1,050 வண்ண ஓவியங்கள் வரைந்து பள்ளி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் பாராட்டு பெற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe