corona -5 people from same family had just returned home

குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டியிருந்தவா்களில் குணமடைந்தவா்கள் 25 நாட்களுக்கு பிறகு வீடுகளுக்கு திரும்பினார்கள். இதில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளான தேங்காய்பட்டணத்தை சோ்ந்த மூன்று பேரும், டென்னிசன் ரோட்டை சோ்ந்த ஒருவரும் மணிகட்டிபொட்டலை சோ்ந்த ஒருவா் என 5 போ் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்கள்.

Advertisment

அவா்களை மருத்துவகல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி மற்றும் மருத்துவா்கள் வாழ்த்தி வழியனுப்பினார்கள். இந்த நிலையில் தனிமைபடுத்தப்பட்ட இன்னொரு பகுதியான வெள்ளாடிச்சவிளையை சோ்ந்த, ஒரு குடும்பத்தை சோ்ந்த 5 பேருக்குகரோனா வைரஸ் தொற்று இருந்ததால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் கணவன் மனைவி அவா்களின் 4 வயது ஆன இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தாயார் ஆகியோர் அடங்குவார்கள்.

Advertisment

இதில் அந்த 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அவா்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவா், நா்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள் இவா்களுடன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உவைஸ், தமுமுக மாவட்ட தலைவா் ஜிஸ்தி முகம்மது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பழங்கள் கொடுத்து கைதட்டி வாழ்த்தி அனுப்பினார்கள்.