Advertisment

சென்னை எம்.ஐ.டியில் 46 மாணவர்களுக்கு கரோனா!

 Corona for 46 students at Chennai MIT!

Advertisment

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். நேற்று மீண்டும் தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் மேலும் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 1,417 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 46 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் அங்கு மேலும் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவி வருகிறது.இதனால் எம்.ஐ.டிக்கு ஒருவாரம்காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Chennai health Medical
இதையும் படியுங்கள்
Subscribe