'Corona' for 4 members of Tamil Nadu CM office

தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.கடந்த 17 நாட்களாக கரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 என்ற நிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளாக ஒரே நாளில் 2000 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை52,334 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும்நான்கு பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் முதல்வர் அலுவலக துணை செயலாளர், 2 அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,இவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.