Published on 19/06/2020 | Edited on 19/06/2020

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 288 இடங்களில் காவல்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ட்ரோன்கள் மூலமாகவும் தீவிரமாக இந்த முழு முடக்கம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 984 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.