/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1070.jpg)
கடலூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்டத்திலுள்ள 18 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சில தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் சார்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதையடுத்து கடலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு மருத்துவ குழுவினருடன் கடலூரில் உள்ள அந்த 3 மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இதுகுறித்து செய்தியளர்களிடம் பேசுகையில், "புகார்கள் வந்த மூன்று மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது, மேலும் கரோனா நோயினால் இறந்தவர்களின் உடலை பணம் கட்டினால் தான் உறவினர்களிடம் ஒப்படைப்போம் என்று பேரம் பேசக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. பின்னர் மூன்று மருத்துவமனைகளுக்கும் நோயாளிகளிடம் வசூலிக்கப்பட்ட பணத்திற்கான ரசீது உள்ளிட்ட விபரங்களை ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தரப்பில் வழங்கும் ரசீதுகள், ஆவணங்களை குழு அமைத்து பரிசீலிப்போம். அதில் தவறுகள் நடைபெற்று இருந்தால் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)