Published on 13/02/2021 | Edited on 13/02/2021

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் கடந்த மாதம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் 28 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது டோஸ் செலுத்தப்படுகிறது. 166 மையங்களில் 3,027 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 99 பேருக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் என மொத்தம் 3,126 பேருக்குத் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. தமிழகத்தில் 26 நாட்களில் 2.27 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் இன்றும் முதல் நபராக இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.