தமிழகத்தில் மேலும் 77 பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். கடந்த 24 மணிநேரத்தில் பரிசோதனைக்கு வந்த 71பேருக்குதொற்று எதுவும் இல்லை.தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.இன்று கண்டறியப்பட்ட 5 பேர் மூலமாக 72 பேருக்கு பரவி உள்ளது எனதலைமை செயலர் சண்முகம்தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவையில் ஒரே நாளில் 26 பேருக்குகரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் 172 பேருக்குகரோனாஇருப்பது உறுதியாகியுள்ளது.கோவையில் ஒரே நாளில் 26 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரேநாளில் 9 பேருக்குகரோனா உறுதியானது.அதன் அடிப்படையில், சென்னையில் மொத்தம் 172பேருக்குகரோனாஉள்ளது. ஈரோட்டில் 60 பேருக்கும், நெல்லையில் 56 பேருக்கும், திண்டுக்கல்லில்54 பேருக்கும் கரோனாஇருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகம் இரண்டாம் நிலையில்தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.