உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 527 பேருக்கு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் சென்னையில் 22 காவலர்களுக்கு இன்று கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயிரை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுவது தொடர்கதையாகி வருவது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.