Skip to main content

ஒரே நாளில் 203 பேருக்கு கரோனா... சென்னையில் ஆயிரத்தை கடந்தது!!!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

Corona for 203 people in a single day in tamilnadu

 

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்து வந்த நிலையில், தற்போது இன்று புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் இன்று 176 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் 906 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மட்டும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,082 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 3,100 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் மேலும் 8 பேருக்கும், திருவள்ளூரில் 6 பேருக்கும், மதுரையில் 3 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருவருக்கும்,  தஞ்சையில் இருவருக்கும்,  அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், நாகை, விழுப்புரத்தில் தலா ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் நேற்றுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில், தற்போது சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 96 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்