Advertisment

மதுரையில் ஒரே நாளில் 195 பேருக்கு கரோனா!!! சென்னை அல்லாத மாவட்டங்களிலும் உயரும் பாதிப்பு!! 

 'Corona' for 195 in Madurai overnight

Advertisment

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில்30-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களிலும்கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் மேலும் 195 பேருக்கு கரோனாபாதிப்பு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1500-ஐகடந்துள்ளது. தற்போது மொத்த எண்ணிக்கையானது 1,672 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,036 பேருக்குகரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதேபோல் கோவையில் இன்று ஒரே நாளில் 157 பேருக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது,இதுவரை 393 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கோவையில் 210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் உயிரிழப்பு 2 ஆக உள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது 400 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 137 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,414 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் தற்போது 299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 923 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று 120 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 1,619 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருவண்ணாமலையில் 42 ஆயிரத்து 332 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கரோனா பரவல்ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 34 பேருக்குகரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது.சேலம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 111பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.கடந்த 3 நாட்களாக 55, 89, 111 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து வருகிறது. அதேபோல் சேலம் மாவட்டத்தில் 373 பேர் கரோனாபாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 113 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் அங்கு இதுவரை வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 18 பேர். மாவட்டம் முழுவதும் இதுவரை 829பேர் கரோனாபாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் மொத்த பாதிப்பு 1,693 ஆக உள்ளது.

அதேபோல் வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 110பேருக்குகரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது 1,123 ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 327 பேர் குணமடைந்துள்ளனர். 600க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona virus kovai madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe