புதுக்கோட்டையில் ஒரே நாளில் 15 போலீசாருக்கு கரோனா!!

Corona for 15 policemen in one day in Pudukkottai !!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 15 போலீசாருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் பணி செய்யும் ஒவ்வொரு போலீசாருக்கும் ஒவ்வொரு மாதம் 5 ஆம்தேதிக்குள் 6 முகக் கவசங்களும் 2 கிருமி நாசினிகளும் மாவட்ட காவல் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல், மாவட்டத்தில் அதிகமான கரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கும் நிலையில் படிப்படியாக போலீசாருக்கும் தொற்று பரவத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 போலீசாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

corona virus police Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe