Skip to main content

காஞ்சியில், பிறந்து 14 நாட்களே ஆன குழந்தைக்கு 'கரோனா' 

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
'Corona' for 14-day-old baby

 

தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று 231 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒருவர் இறந்ததால் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் 29 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் இன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரியலூரில் 4 வயது குழந்தைக்கும், பெரம்பலூரில் 6 வயது சிறுவனுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அண்மையில் தென்கொரியாவில் பிறந்து 28 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு எந்தவொரு மருத்துவ சிகிச்சைகளும் இல்லாமல் மருத்துவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து மூன்று வாரம் தாய்ப்பால் மட்டும் கொடுக்கப்பட்டு கரோனாவிலிருந்து குழந்தை  குணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பரந்தூர் ஏர்போர்ட்; இரண்டாம் கட்டமாக வெளியான திடீர் அறிவிப்பு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Notice to acquire land for Parantur Airport

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வகுடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாக்கியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூரில் நிலம் எடுப்பு அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.