தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு 'கரோனா'

 Corona for 121 people in Tamil Nadu

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இன்று மட்டும்தமிழகத்தில் 121பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்பொழுது கரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 2058 ஆக உயர்ந்துள்ளது. 121 பேரில்102 பேர் சென்னையிலும், செங்கல்பட்டில் 12 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 3பேருக்கும், நாமக்கல்2பேருக்கும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1128 பேர் மொத்தமாக இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று மட்டும் 37 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இன்று உறுதியான 121 பேரில் 80 பேர் ஆண்கள், 41 பேர் பெண்கள்.தற்பொழுது 902 பேர் கரோனாபாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30,000 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 47 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். சென்னையில் மட்டும் 673 பேருக்கு மொத்தமாக இதுவரைபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Chennai corona virus Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe