தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்பு எண்ணிக்கை என்பது அதிகரித்து வரும் நிலையில்,தற்போது தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட 11 பேரில் 9 பேர் சென்னையிலிருந்தும்,2 பேர் பெங்களூரிலிருந்தும் தர்மபுரிக்கு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.