Corbovax vaccine for 12-14 year olds from today!

Advertisment

நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று முதல் கோர்போவாக்ஸ் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. தமிழகத்தில் 21.21 லட்சம் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி போடப்படவுள்ளது. இணையதளத்தில் முன்பதிவு செய்தும் அல்லது நேரடியாகச் சென்றும் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். ஹைதராபாத்தின் பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி சிறுவர்களுக்கானது. கோர்போவாக்ஸ் போட்டுக்கொண்ட அடுத்த 28 நாட்கள் ஆன பிறகு இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த தடுப்பூசியை மார்ச் 25க்குள் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 வயதுக்குமேற்பட்ட அனைவரும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.