Cops shot; There is excitement in the Kalaiyar temple

Advertisment

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அடுத்தடுத்து ரவுடிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சிவகங்கையில் ஆய்வாளரை ரவுடி ஒருவர் வெட்டிவிட்டு தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அகிலன் என்ற ரவுடி வாகனத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக போலீசார் அகிலனை தடுத்து நிறுத்தினர். அப்போது வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களால் உதவி காவல் ஆய்வாளர் குகன் என்பவரை அகிலன் தாக்க முயன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பமுயன்றுள்ளார்.

உடனடியாக அங்கிருந்த மற்றொரு காவல் ஆய்வாளர் ஆடிவேல் அகிலனை துப்பாக்கியால்சுட்டுப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து ரவுடி அகிலன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காளையார் கோவில்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.