Advertisment

திப்பு சுல்தான் காலத்து செப்புப் பட்டயம் -அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

Copper sword from Tipu Sultan's era handed over to the Government Museum

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் சம்பவத்தன்று தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பட்டயம் கண்டெடுக்கப்பட்டது. அந்த பட்டயத்தை கல்லூரியில் முதல்வர் ஈரோடு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த பட்டயம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

அந்த பட்டயம் குறித்து ஆய்வு செய்ததில், அது ஒரு செப்புப் பட்டயம் எனவும், 26 சென்டிமீட்டர் நீளமும், 20 சென்டிமீட்டர் அகலமும், 950 கிராம் எடையும் உடையது. இரு பக்கமும் எழுதப்பட்டுள்ளது. இது 1796 ஆம் ஆண்டு செப்புப் பட்டயம் எனவும் அறியப்பட்டது. இது திப்பு சுல்தான் காலத்து மன்னரால் இரு தரப்பு மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக எழுதப்பட்ட தீர்ப்பு பட்டயம் எனவும் அறியப்படுகிறது.

Advertisment
history excavation Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe