Advertisment

தனியார் மருத்துவமனைக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதி உதவியுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடந்தது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்,தமிழ்நாடு சுகாதாரதிட்ட இயக்குநர் உமா ஆகியோர் பங்கேற்றனர். இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.