ADVERTISEMENT

இடைத்தேர்தலை மிஞ்சும் தென்றல் நகர் கூட்டுறவு சங்க தேர்தல்! திக் திக் டென்ஷன் ! 

10:55 AM Sep 01, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழக முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் திருச்சியில் நடைபெறும் தென்றல் நகர் கூட்டுறவு சங்க தேர்தல் தான் திருச்சி மாவட்டத்திலேயே இடைத்தேர்தலை விட பயங்கர டென்ஷனில் திக்திக் என டெம்போவை உயர்த்தி உள்ளது.

ADVERTISEMENT

திருச்சி தென்றல் நகர் கூட்டுறவு சங்கத்திற்கு அ.தி.மு.க சார்பில் தலைவராக இருந்த பால்ராஜ் என்பர் தற்போது தினகரன் அணியில் இருக்கிறார் என்பதால் தேர்தல் அறிவித்த நாளிலேயே கடந்த மார்ச் 26ம் தேதி திருச்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ததற்கான ஒப்புகை சீட்டு திமுக, டிடிவி தினகரன் அணியினருக்கு வழங்கப்படாததால் சங்கத்திற்கு பூட்டு போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாக குழு முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்த கடைசி திருச்சி கே.கே.நகர் தென்றல் நகர் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய திமுகவினர் வந்திருந்தனர். அப்போது அதிமுகவை சேர்ந்த சில நிர்வாகிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு வந்தனர்.

பின்னர் மனுதாக்கல் செய்ய சென்றபோது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் அறையில் இருந்த தேர்தல் அதிகாரி வெளியேறினார். இதனால் கூட்டுறவு கட்டிட சங்கத்தை திமுகவினர் முற்றுகையிட்டனர். இதையடுத்து தேர்தல் அலுவலக ஊழியர்கள் வெளிகேட்டை சாத்தி அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதை கண்டித்து அப்போதே திமுக மற்றும் டிடிவி தினகரன் அணியினர் வெளியே தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் மதியம் திமுக மாநகர செயலாளர் அன்பழகன் அங்கு சென்று தேர்தல் அலுவலக முன்பக்க கேட்டை திறக்க சொல்லி ஊழியர்களிடம் தெரிவித்தார். இதன் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் கேட் திறக்கப்பட்டது. மதியத்திற்கு மேல் வேட்பு மனுதாக்கல் நடை பெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையால் அடிதடி சேர் உடைப்பு பிரச்சனை அசாதாரண சூழ்நிலை நிலவியதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதன் பிறகு நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தேர்தல் தேதி செப்டம்பர் 1 என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த சங்கத்தில் தலைவராக இருந்த பால்ராஜ் தற்போது தினகரன் அணியில் இருப்பதால் இவருக்கு பின்புலத்தில் சாத்தனூர் ராமலிங்கம் நிற்கிறார். இதற்கிடையில் தினகரன் அணியில் இருந்த அபிசேஷகபுரம் கோட்டத்தலைவர் ஞானசேகரன் சமீபத்தில் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த தேர்தல் பொறுப்பு வேலைகளில் அவருக்கும் கொடுக்கப்பட்டது. அப்போது ஞானசேகரன் சாத்தனூர் ஆளுங்க என்ன பெரிய ஆளா அவுங்களுக்கு பயப்படுனுமா என்று பேசியதாக பேச்சு கசிந்தது.

அதிமுக அணி

இந்த பேச்சு சாத்தனூர் பகுதியில் கல்விதந்தை, ரியல்எஸ்டேட் , என அதிகாரம், பணம் பலம் படைத்த தொழில்அதிபர் சாத்தனூர் சிவா காதுக்கு செல்ல கடுப்பான சாத்தனூர் சிவா எனக்கு இரண்டு வேட்பாளரும் சொந்தகாரன். அதனால அமைதியா இருந்தேன் இந்த தேர்தலில் ஏன் ஊரை பத்தி பேசணும் என்று ஞானசேகரனை கடுமையாக விமர்சிக்க பதிலுக்கு ஞானசேகரன் மா.செ. குமார் உதவியுடன் போலிஸ் கமிஷனர் வரை செல்ல பின்பு சமாதானம் ஆகி தேர்தல் முடியட்டும் பிறகு பார்க்கலாம் என்று இரண்டு தரப்பு தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கினார்கள்.

இந்த சங்கத்திற்கு 469 ஒட்டுகள் திருச்சி முழுவதும் பரவி இருக்கறது. இதில் இறந்தவர், வெளியூர் சென்றவர் என்று பட்டியல் எடுத்து 400 பேர் லிஸ்ட்டில் எடுத்த குமார். மா.செ. இதில் ஜெயித்தே ஆக வேண்டும் என்று பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம், ஞானசேகரன், ஏர்போர்ட்விஜி, மாத்தூர்நடராஜன், கார்த்திகேயன், ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை களத்தில் இறக்கி ஒவ்வொரு வாக்காளர்களுக்கும், பணம், குத்துவிளக்கு என கொடுத்தார்.

தினகரன் அணி

இதை கேள்விப்பட்ட தினகரன் அணி மா.செ. சீனிவாசன் தலைமையிலான குழு அ.தி.மு.க. குழுவில் உள்ள வேட்பாளர் ஒருவரையே விலைக்கு பேசி அழைத்து சென்றனர். அவர் இந்த தொகுதி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஜாதிகாரர் என்பதால் பிரச்சனை இன்னும் உச்சிக்கு சென்றது. விசயத்தை கேள்விப்பட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஐய்யய்யோ முதலுக்கே மோசமாயிடுமே என்று பயந்து அந்த வேட்பாளரை கெஞ்சி தடுத்து நிறுத்தினார்.

கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்ட சாத்தனூர் சிவா தன்னுடைய பலம் முழுவதையும் பயன்படுத்தி ஆரம்பித்து வேட்பாளர்களுக்கு பாதுகாப்பும், வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கும் பணமும் என வாரி இரைக்க ஆரம்பித்ததால் இது இடைத்தேர்தலை விட திக்திக் தேர்தலாக மாறியது.

இப்படி இரண்டு அணிகளும் மாறி மாறி உச்சகட்ட மோதலில் வேட்பாளர்களை விலைக்கு பேசுவதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, செய்வதும் மிரட்டல் குரல்கள் அதிகாரித்து வருவதும் போலிஸார் மத்தியில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருவதாலும் உளவுத் துறையினர் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறனர். லோக்கல் போலிஸ் பலத்த பாதுகாப்பு அளித்து வருகிறது.

குறிப்பு !

நம்மிடம் பேசிய லோக்கல் ஆள் ஒருவர், சார்.. இது வெளிப்படையாக தேர்தல் மோதல் என்று தெரிந்தாலும் இந்த சங்கத்துக்கு சொந்தமாக 0.77 ஏக்கர் நிலத்துக்காகத் தான் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார் . என்னா சார் இப்படி சொல்றீங்க கொஞ்ச விரிவா சொல்லுங்க என்று கேட்டோம்.

இந்த சங்கத்திற்கு சொந்தமாக 0.77 ஏக்கர் இடம் இருக்கு. இது பள்ளிக்கூடம் கட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை கடந்த ஆட்சியில் அந்த பகுதியில் ஆர்ச்சர்டு சுப்ரமணியன் என்பவர் சதுர அடி ரூ 1000 என்று பேசி பேச்சுவார்த்தையில் முடிவதற்குள் பத்திரபதிவு குறைவு, தேர்தல் தள்ளிவைப்பு அடுத்தடுத்து நடந்ததால் ஏற்கனவே ஆளும்கட்சியிடம் இந்த இடம் சம்மந்தமாக பேசியதால் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஆர்ச்சர்டு சுப்ரமணியனும் களம் இறங்கி இருப்பதால் தான் இந்த உச்சகட்ட மோதல் என்கிறார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளிவரும் 3 தேதி வரை இந்த தேர்தல் பெரிய டென்ஷனை உருவாக்கியுள்ளது என்பது மட்டும் உண்மை.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT