/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/995_124.jpg)
போலிக் கல்விச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கூட்டுறவு சங்கஊழியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேஆரியூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில்அலுவலக உதவியாளராக ஜெயராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 8 ஆம் வகுப்பு படித்துள்ளதாகபோலியான கல்விச்சான்றிதழ் தயாரித்துவேலையில் சேர்ந்துள்ளதாகப் புகார் கிளம்பியது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சங்கத் தலைவர், சங்கச் செயலாளர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அதில், அலுவலக உதவியாளர் ஜெயராமன் போலிச்சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தெரியவந்தது.இதனையடுத்து ஜெயராமனை சங்கத் தலைவர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Follow Us