Skip to main content

கூட்டுறவு சங்கத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்  முறையாக...

Published on 03/04/2018 | Edited on 03/04/2018


 

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் (2018) வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஒட்டப்பட்ட வேட்பாளர் தேர்வு பட்டியலை கிழித்துவிட்டு வேட்பு மனு தாக்கல் செய்த தகுதியான அனைவரின் பெயர் பட்டியலையும் ஒட்டியுள்ளார் ஒரு தேர்தல் அதிகாரி. இந்த சம்பவம் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக் கோரி போராடிவரும் அரசியல் கட்சியினருக்கே அதிர்ச்சியளித்துள்ளது. ஆளும் கட்சியினருக்கு ஆத்திரமூட்டியுள்ளது.

  

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயக்கடன் சங்கம் இயக்குநர் தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலினை செய்ய தேர்தல் ஆணையர் காலையிலிருந்து வராத காரணத்தால் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதுடன் உள்ளிருப்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 
 

இதனிடையே ஆளும் தரப்பை சேர்ந்தவர்களின் பட்டிலை வெளிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போராட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் பின்வாங்கவில்லை இரவு 8 மணிக்கு வந்த போலிசார் தேர்தல் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு முழு வேட்பாளர் பட்டியல் வெளியிட நேரம் கேட்டுவிட்டு போலிஸ் பாதுகாப்புடன் தகுதியான வேட்பாளர் பட்டியலை தயாரித்து 9 மணிக்கு கொண்டுவந்து ஒட்டினார். அதன் பிறகு பட்டியலை சரிபார்த்த ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் தேர்தல் அதிகாரியுடன் சேர்த்து வீடியோ, மற்றும் படங்கள் எடுத்துக் கொண்டனர்.

  அதன் பிறகு வெளியே வந்த ஆசிரியர்கள் தான் தமிழக கூட்டுறவு சங்க வரலாற்றிலேயே முதல்முறையாக.. ஒட்டிய  வேட்பாளர் பட்டியலை கிழித்துவிடு மாற்றுப் பட்டியலை ஒட்டியுளளனர் என்ற ஆசியர்கள், இதனால் தேர்தல் அதிகாரி கூட மாற்றப்படலாம் அல்லது தேர்தலில் முறைகேடு என தேர்தலை ரத்தும் செய்வார்கள் என்றனர்.

   

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டுறவு உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Attention Applicants for Cooperative Assistant Exam

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி (10.11.2023) அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கான எழுத்துத் தேர்வு வரும் 24 ஆம் தேதி (24.12.2023) கொளத்தூர் தொன் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, அண்ணா நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, நந்தனம் அரசினர் கலைக் கல்லூரி, சேத்துப்பட்டு பச்சையப்பா கல்லூரி ஆகிய 6 மையங்களில் நடத்தப்படவுள்ளது.

இத்தேர்விற்கான அனுமதி நுழைவுச் சீட்டினை (Hall Ticket) நேற்று (18.12.2023) முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://www.drbchn.In என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு chennaidrb@gmail.com மின்னஞ்சல் முகவரியையும், 044-2461 6503 மற்றும் 044-2461 4289 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனச் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Diwali bonus announcement for co-operative society workers

 

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

 

தமிழக கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2023-2024-இல் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

 

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு 3 அயிரம் ரூபாயும், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு 2 ஆயிரத்து நானூறு ரூபாயும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44 ஆயிரத்து 270 பணியாளர்களுக்கு  28 கோடியே ஒரு இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.