Advertisment

பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து! 

coonoor school student incident youth and peoples police investigation

Advertisment

பள்ளி மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளிக்கு 12- ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வழக்கம் போல் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த மாணவிக்கு ஏற்கனவே பழக்கமான ஆசிக் என்ற இளைஞர் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில், ஆசிக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த மாணவியின் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். இதையடுத்து, மாணவியின் சத்தத்தைக் கேட்டு திரண்ட பொதுமக்கள், அந்த இளைஞரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், கத்திக்குத்தில் காயமடைந்த மாணவி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு லாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.இதனிடையே, கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இச்சம்பவம் காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

school coonoor nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe