Coonoor helicopter crash ... Army pays tribute to BipinRawat's body today!

Advertisment

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு இன்று ராணுவ மரியாதை செலுத்தப்பட இருக்கிறது.குன்னூர்வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், முப்படைகளின் தளபதி ஹரிகுமார் (கடற்படை), வி.சவுத்ரி (விமானப்படை), நரவானே (ராணுவம்)மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த அஞ்சலி நிகழ்வுக்குப் பின் 13 பேரின் உடலும் ராணுவ வாகனத்தில் கொண்டுசெல்லப்பட இருக்கிறது. பின்னர் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து உடல்கள் ராணுவ விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட இருக்கிறது.