Advertisment

குன்னூர் பேருந்து விபத்து; ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை

Coonoor bus incident RTO action

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காகப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

Advertisment

இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவின் கீழ் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன்படி பேருந்து உரிமையாளர் சுப்பிரமணி (வயது 65), ஓட்டுநர்கள் முத்துக்குட்டி (வயது 65), கோபால் (வயது 32) மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் (வயது 64) ஆகியோர் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவு 279, 337, 304 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில், இந்த விபத்து குறித்து காவல் துறையினருடன் இணைந்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர். தியாகராஜன் விசாரணை மேற்கொண்டு வந்தாரர். இந்த விசாரணையில் பேருந்தின் ஓட்டுநர் முத்துக்குட்டி பேருந்தை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாக இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஓட்டுநர் முத்துக்குட்டியின் ஓட்டுநர் உரிமத்தை 18.10.2023 முதல் 17.10.2033 வரை என 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர். தியாகராஜன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

bus coonoor ooty
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe