'Cooker' of ammk confiscated

Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள்அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்குவந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கானதொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைதீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்அரசியல் கட்சியினர்கள்வைந்திருத்தபேனர்களைஅகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து தஞ்சைக்குகொண்டுசெல்லஇருந்த நிலையில், அரியலூரில் 'ஜெயலலிதா பிறந்தநாள் விழா' என ஸ்டிக்கர் ஒட்டி லாரியில் எடுத்து செல்லப்பட்ட சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ளஅமமுகவினரின் 3520குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி லாரியில் குக்கரைஎடுத்து சென்றதால் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.