Convulsion of driver in moving bus- Shocking CCTV footage

Advertisment

கடந்த மாதம் 28ஆம் தேதி காரைக்காலில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தின் மீது மோதி நின்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் அந்த விபத்தின் போது பேருந்திலிருந்த கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 28ஆம் தேதி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஒன்று திருநள்ளாறு அடுத்த அம்பகத்தூரிலிருந்து காரைக்கால் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென பேருந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்திலிருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தின்போது பேருந்திலிருந்த சிசிடிவி காட்சிப் பதிவை நகரப் போக்குவரத்துக் காவல் நிலைய போலீசார் கைப்பற்றினர். அந்த சிசிடிவி காட்சியில் பேருந்தை இயக்கிக் கொண்டிருக்கும்பொழுதுஓட்டுநர் ஐயப்பன்வலிப்பு ஏற்பட்டு ஸ்டியரிங் மேல் நிலைகுலைந்து படுத்துக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தற்பொழுது இந்தக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.