Advertisment

பட்டமளிப்பு விழா; பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

convocation; Prime Minister Modi, Chief Minister M.K.Stal participated

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் நவம்பர் 2022க்கு முன்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் நவம்பர் 2022 மற்றும் ஏப்ரல் 2023இல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறத் தகுதியான இளநிலை, முதுநிலை, ஆய்வில் நிறைஞர், பட்டயம், பட்ட சான்றிதழ் படிப்பு படித்த மானவர்களுக்கு இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்பட உள்ளதாகப்பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Advertisment

இதனையடுத்து பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் ஜனவரி 2 ஆம் தேதி இந்த பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
trichy convocation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe