Convict's confession on Financier hacked to hit over rs. 6,000 loan arrears in vellore

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் ராகவேந்திரா கோவில் அருகே வாலிபர் ஒருவர் வெட்டு காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக வேலூர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் வடக்கு காவல் துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டனர்.

Advertisment

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், படுகொலை கொலை செய்யப்பட்ட நபர் சத்துவாச்சாரி செங்காநத்தம் ரோடு மகாவீர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ பைனான்சியர் செந்தில்குமார் (39) என தெரியவந்தது. இவர் வேலூர் ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பைனான்ஸ் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வருவதாக தனது மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்படி சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. அவரது மனைவிக்கு, கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவலே கிடைத்துள்ளது.

Advertisment

இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டவருடன் நீண்ட நேரமாக ஒருவர் பேசிக் கொண்டிருப்பது தெரியவந்தது.அந்த சமயத்தில் செந்தில்குமார் தனது ஸ்கூட்டி பெப் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்ப முயற்சித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை அங்கேயே வெட்டி சாய்த்துள்ளது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து செந்தில்குமார் உயிர் இருந்து இருக்கிறார். சம்பவ இடத்தில் மோப்ப நாய் சாராவை கொண்டு தடவியல் நிபுணர்களைக் கொண்டும் கொலையாளிகளை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் தேடத் துவங்கினர்.

இதில், வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் செந்தில்குமாரிடம்முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதில் 24 ஆயிரம் ரூபாய் திருப்பித் தந்ததாகவும் மீதி 6 ஆயிரம் ரூபாய் தராமல் இருந்துள்ளார். அந்த பணத்தைக் கேட்டு பரசுராமனுக்கு, அதிக நெருக்கடி தந்ததாகவும் வட்டி கேட்டு டார்ச்சர் தந்ததாகவும், அவமானப்படுத்தி பேசியதை தாங்க முடியாமல் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர் .

Advertisment