Advertisment

பழையபடி ஆரம்பிச்சுடாய்ங்கப்பா... மதுரையில் சர்ச்சை போஸ்டர்

புலம்பும் திமுக உடன்பிறப்புகள் மதுரையில் எப்பவுமே வித விதமான வாசகங்களில் போஸ்டர் அடிப்பதில் அசத்துவர்கள் அழகிரி விசுவாசிகள் அது சிலநேரம் வேடிக்கையாகவும் இருக்கும் அதே சமயத்தில் கட்சிக்குள் பெரிய கிளேபாரத்தையும் ஏற்படுத்திவந்த நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணனுக்கே முடிசூட்டவேண்டும் என்று பொருள்படும் வாக்கியங்களோடு ஒட்டபட்ட போஸ்டரால் திமுகவுக்குள் ஸ்டாலின் அழகிரி விரிசல் பெருசானது. அடுத்தடுத்து நடந்த விசயம் ஊரரிந்தது.

Advertisment

controversy poster in Madurai

தற்போது முழுவதுமாக ஒதுங்கி தன் பிறந்தநாளை கூட யாரும் வரவேண்டாம் என்ற நோக்கில் மதுரையில் இல்லாமல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். எப்பவும் விமானநிலையத்தில் அடிக்கடி பேட்டி கொடுப்பதை நிறுத்தி கொண்ட அழகிரி தற்போது உடல்நிலை சரியில்லாமல் ஓய்வு எடுத்துவந்த நிலையில் செல்லூர் அழகிரியின் தீவிர ஆதரவாளர் நாகூர் கனி மற்றும் ஆதரவாளர்களால் அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே பாடல் வரிகள் போல அண்ணே அண்ணே அழகிரி அண்ணே நம்ம கட்சி நல்ல கட்சி இப்ப ரொம்ப கெட்டுபோச்சுண்ணே என்று கிண்டல் அடிக்கும் நோக்கில் போஸ்டர் மதுரை எங்கும் ஒட்டியுள்ளது மீண்டும் திமுக வினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

madurai Poster azhagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe